மருத்துவம் ஓர் அறிமுகம்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.,

நோய் என்றால் என்ன?
மருத்துவம் என்றால் என்ன?
மருத்துவத்தின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும்?


என்ற கேள்விகளே ஆரோக்கிய தேடலின் முதல் படி., இந்த கேள்விகளுக்கான பதில்களை உணர்ந்து கொள்ளும் பொழுது மருத்துவத்தின் சிக்கலான கட்டமைப்புகள் உடைத்தெறியப்பட்டு அது எல்லோருக்கும் புரியும் எளிய வடிவத்தை பெறுகிறது.,

நோய் என்றால் என்ன?
"மிகையினும், குறையினும் நோய் செய்யும்"
-வள்ளுவர்

உடலில் உள்ள ஏதோ ஒன்று (என்னவெல்லாம் இருக்கிறது, எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம், இறைவன் நாடினால்.,) தேவைக்கு அதிகமாய் இருப்பது அல்லது தேவைப்படும் அளவை விட குறைவாக இருப்பது, அதாவது உடல் ஏதோ ஒரு காரணத்தால் சமநிலையில் இல்லாமல் இருப்பது தான் நோய் என்று அரை வரியில் விளக்கம் அளிக்கிறார் வள்ளுவர்.,

மருத்துவம் என்றால் என்ன?
" நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."
-வள்ளுவர்

உடலின் சமநிலையற்ற நிலை தான் நோய், சமநிலையற்ற உடலை சமநிலை படுத்தும் செயலே அந்த நோயிற்கான மருத்துவமாகும்.,

இந்த மருத்துவத்தின் அடிப்படையை வள்ளுவர் மிக அழகாக வரையறை செய்கிறார்., முதலில் நோயிற்கான காரணம், அதாவது, குறிப்பிட்ட எந்த ஒன்றின் மிகை அல்லது குறையினால் நோய் ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், பின் நோயின் தன்மையை கண்டறிய வேண்டும், பின் அந்த மிகை அல்லது குறையினை சமநிலை படுத்தும் வழிமுறையை கண்டறிந்து அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.,



அறிகுறிகள்:

இன்று நம்மில் பெரும்பான்மையானவர்கள், (மருத்துவர்களும் கூட) அறிகுறிகளைத் தான் நோய் என்று நினைத்துக் கொண்டு அந்த அறிகுறிக்கு வைத்தியம் செய்ய முற்படுகிறோம்., நோய் என்பது வேறு அதன் அறிகுறி என்பது வேறு.,

உதாரணமாக, உடலில் மலம் சரியாக வெளியேறாமல் கழிவாக தங்கிவிட்டால் தலை வலி ஏற்படும், நம்மில் பலர் இந்த தலை வலி தான் நோய் என்று நினைத்து அதற்கு வைத்தியம் பார்க்கிறோம்., உண்மையில் மலம் வெளியேறாமல் இருப்பது தான் நோய், அதன் அறிகுறி தான் தலை வலியே தவிர அது நோயல்ல., எப்போதும் நாம் வைத்தியம் செய்ய வேண்டியது நோய்க்கு தானே தவிர அறிகுறிக்கு அல்ல., அறிகுறிக்கு வைத்தியம் செய்தால் தலை வலி சரியாகிவிடும், மலம் வெளியேறாமல் அப்படியே தான் இருக்கும்., வைத்தியத்தின் வீரியம் குறையும் போது மீண்டும் தலை வலி வரும், மலம் வெளியேறும் வரை எவ்வளவு வைத்தியம் செய்தாலும் தலை வலி வந்து கொண்டே தான் இருக்கும்., இது போல் தான் அனைத்து நோய்களுக்கும்., அதே போல் மலம் வெளியேறாமல் இருப்பதினால் மட்டும் தான் தலை வலிக்கும் என்றில்லை., சரியான தூக்கம் இல்லை என்றாலும் தலை வலி வரும்., ஒரே மாதிரியான அறிகுறி ஆனால் வேறுவேறான நோய் எனவே தான் அறிகுறிக்கு வைத்தியம் செய்யக் கூடாது., நோய்க்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்.,

நாம் செய்யும் மருத்துவம், காரியங்களுக்கு (அறிகுறிகளுக்கு) அல்லாமல், காரணங்களுக்கானதாய் (நோய்களுக்கு) இருந்தால் மட்டுமே அதுவே பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாய் அமையும்.,

நன்றி.,

மனநல மற்றும் மருத்துவ
ஆலோசனைகளுக்கு,
SM அக்குபங்சர் கிளீனிக்,
நாகர்கோவில்,
Call & WhatsApp: +91 8056362189
E-Mail: musthafays@gmail.com

Comments

Popular posts from this blog

லூசிஃபர் Vs இப்லீஸ்?

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"

இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்.,