பாரம்பரிய உடலியல்-அறிமுகம்
(இது ஒரு தொடர் பதிவு)
குறிப்பிட்ட
காலத்திற்கு முன்புவரை நம் ஒவ்வொரு வீட்டிலும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை
அறிந்தவர்கள் (மருத்துவர்கள்) இருந்தார்கள்., அவர்கள் நோய் காரணம்
மற்றும் அதற்கான தீர்வு எதை சாப்பிட்டால் எது சரியாகும் போன்ற மருத்துவத்தின்
எளிமையான கட்டமைப்பை உணர்ந்திருந்தனர்., ஆனால், இன்று மருத்துவம் என்பது ஒரு சிக்கலான கட்டமைப்பு என்றும் அது நம்மை
போன்றவர்களுக்கு புரியாது என்றும் நாம் நம்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்., அதன் விளைவே சிறிய தலைவலிக்கும் பெரிய அளவில் பயந்து மருத்துவரிடம்
ஓடிக் கொண்டிருக்கிறோம்.,
மருத்துவம்
கடந்த காலங்களில் எளிமையானதாக இருந்ததற்கு காரணம் அந்த மக்களின் உடல் பற்றிய எளிய
புரிதல், அந்த புரிதலையே நான் பாரம்பரிய உடலியல் என்று
சொல்வேன்.,
நம்
முன்னோர்கள் ஏழு விசயங்களைக் கொண்டு உடலை அறிந்து புரிந்தனர்.,
(எனது முந்திய பதிவில் உடல் தாதுக்களை சேர்க்காமல்
ஆறு என்று குறிப்பிட்டிருந்தேன்.,)
அவை:
1. பன்னிரெண்டு உறுப்பு.,
2. ஏழு தாதுக்கள்.,
3. ஆறு சுவை.,
4. ஐந்து பூதம்.,
5. மூன்று சுழற்சி.,
6. இரண்டு தன்மை.,
7. ஒரு உயிர்.,
இந்த ஏழை
சார்ந்தே உடலும், உடலின் செய்கைகளும் அமைந்திருக்கிறது என்பதால்
இந்த ஏழையோ அல்லது இதில் ஏதாவது ஒன்றையோ பற்றிய தெளிவான
புரிதல் இருக்கும் ஒருவர் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்திருப்பதில் ஆச்சரியமில்லையே., அவர் தனக்கோ, தனது குடும்பத்தார்களுக்கோ ஏற்படும் உடல்
பிணிகளில் பெரும்பான்மையானவற்றிற்கு மருத்துவரிடம் செல்லவோ செலவு செய்யவோ தேவை
இருக்காது.,
1. பனிரெண்டு உறுப்புகள்.,:
இந்திய
மற்றும் சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பன்னிரெண்டு
உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,
அவை:
i) நுரையீரல்(Lungs)
ii) பெருங்குடல்(Large Intestine)
iii) இரைப்பை(Stomach)
iv) மண்ணீரல்(Spleen)
v) இருதயம்(Heart)
vi) சிறு குடல்(Small Intestine)
vii) சிறுநீரகப்பை(Urinary Bladder)
viii) சிறுநீரகம்(Kidney)
ix) இருதய மேலுறை(Pericardium)
x) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)
xii) பித்தப்பை(Gall Bladder)
xii) கல்லீரல்(Liver)
இந்த
பன்னிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில்
மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,
மூளை
வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான்
என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,
2. ஏழு தாதுக்கள்.,:
இந்திய
பாரம்பரிய மருத்துவம் உடலை யாக்கை என்று சொல்கிறது., யாக்கை என்பதற்கு
தாதுக்களால் கட்டமைக்கப்பட்டது என்று பொருள்., ஆம், உடல் ஏழு தாதுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது., அவை,
i) சாரம்.,
ii) செந்நீர்.,
iii) ஊன்.,
iv) கொழுப்பு.,
v) எலும்பு.,
vi) மஞ்ஜை.,
vii) சுக்கிலம்.,
3. ஆறு சுவை.,:
இந்திய
பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தங்களுக்கு தேவையானதை
சுவையில்(உணவில்) இருந்தே பெற்றுக் கொள்கின்றன., மேலும் உடலில் உள்ள ஏழு
தாதுக்களும் இந்த சுவைகளாலே உருவாக்கப்படுகின்றன.,
இந்த சுவைகள் ஆறாக வகை
படுத்தபடுவது நாம் அறிந்த ஒன்றே.,
அவை:
i) இனிப்பு.,
ii) புளிப்பு.,
iii) உப்பு.,
iv) காரம்.,
v) துவர்ப்பு.,
vi) கசப்பு.,
சுவைகளின்
மிகை குறைகளே பெரும்பாலும் நோய்க்கு காரணம் என்பதால் உணவில் கவனம் செலுத்துவது
ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாகிறது.,
4. ஐந்து பூதம்.,:
இந்திய
பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை
அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.,
அவை:
i) நிலம்.,
ii) நீர்.,
iii) நெருப்பு.,
iv) காற்று.,
v) ஆகாயம்.,
5. மூன்று சுழற்சி.,:
இந்திய
பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலின் சீரான
செயல்பாட்டிற்கு காரணமான மூன்று சுழற்சிகளைப் பற்றி நமக்கு சொல்கிறது., இந்த மூன்று சுழற்சிகளே உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாகவும், அதே நேரத்தில் அந்த நோய்களை குணமாக்குவதற்கான வழியாகவும் இருக்கிறது.,
அவை:
i) ஆக்கச் சுழற்சி(வாதச் சுழற்சி)
ii) அழிவுச் சுழற்சி(பித்தச் சுழற்சி)
iii) காக்கும் சுழற்சி(கபச் சுழற்சி)
இந்த
மூன்று சுழற்சிகளும் பஞ்சபூதத்தை அடிப்படையாக கொண்டு உடலை இயக்கிக்
கொண்டிருக்கிறது.,
6. இரண்டு தன்மை.,:
இந்திய
பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியல் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடல் உறுப்புகள்,
அவற்றின் செயல்கள், இன்னு உடல் சார்ந்த அனைத்தும் இரண்டு தன்மைகளாக வகை
படுத்தப்படுகிறது.,
அவை:
i) இயக்கம்(வலது).,
ii) இருப்பு(இடது).,
7. ஒரு உயிர்.,:
உயிர், இதுவரை இன்னதென்று அறுதியிட்டு வரையறை செய்யப்படாத ஒன்று., மருத்துவ வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கிறோம் என்றும் பெருமை பேசும்
இந்த காலத்திலும் சரி, உண்மையில் உச்சத்தில் இருந்த பண்டைய காலத்திலும்
சரி, உயிர் என்பது இது தான் என்று எந்த மேதையாலும்
வரையறுத்து சொல்ல முடியவில்லை.,
உண்மையில் உயிர் என்பது
என்ன? என்ற கேள்விக்கு பதில் இறைவனால் மட்டுமே சொல்ல
முடியும் என்பதே தலை சிறந்த மருத்துவர்களின் கருத்து.,
நான்
மேல்சொன்ன ஏழும் ஒன்று இன்னொன்றோடு இணைத்து செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது., இவற்றை அறிந்துணரும் போது மருத்துவம் எளிமையானதாக மாறுகிறது., உங்களுக்கு நீங்களே மருத்துவராகவும் மாறுகிறீர்கள்., இறைவன் நாடினால்.,
தொடரும்.,
நன்றி.,
இது தொடர்பான சந்தேகங்கள், விமர்சனங்கள்,
மனநல மற்றும் மருத்துவ
ஆலோசனைகளுக்கு,
SM அக்குபங்சர் கிளீனிக்,
நாகர்கோவில்,
Call & WhatsApp: +91
8056362189
E-Mail:
musthafays@gmail.com
Comments
Post a Comment